Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மருதூரில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மகேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மகேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரிக்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விழுப்புரம் நகர போலீசார் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |