Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவன் தான் காரணம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் ஜெகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்தா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஜெகதீஸ்வரன் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித்தா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித்தாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து அஜித்தாவின் உறவினர்கள் ஜெகதீஸ்வரனை கைது செய்யக்கோரி லால்குடி ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அஜித்தாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததால் அஜித்தாவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |