Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் எலி பசையை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான சித்திரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் தமயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தமயந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் எலி பசையை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தமயந்தி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |