கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் கவிதா என்ற பெண் வசித்து வருகிறார். 2019ஆம் ஆண்டு எல்லப்பன் என்பவரை கவிதா பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில் தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுடன், எல்லப்பனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கவிதாவை விட்டு பிரிந்து எல்லப்பன் அந்தப் பெண்ணுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் தட்டி கேட்க சென்ற கவிதாவையும் அவர் மிரட்டி சேர்ந்து வாழ்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற கவிதா எல்லப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென உடல் முழுவதும் பெற்றோலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கவிதாவை தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு துணை கமிஷனர் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு கவிதா அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.