Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பழக்கம்…. பெண்ணின் விபரீத செயல்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜெயபாரதி தனது குழந்தைகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். தற்போது சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த ஜெயபாரதி நாம் சேர்ந்து வாழலாம் என தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சரவணன் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது 2 குழந்தைகளுடன் ஜெயபாரதி மனு அளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஜெயபாரதி திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |