காதலன் இறந்த துக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்ன செட்டிபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மலர்கொடியும், ரஞ்சித்குமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 20-ஆம் தேதி திடீரென ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொண்டதால் மலர்க்கொடி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் விடுமுறை எடுத்து வீட்டிற்கு சென்ற மலர்க்கொடி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிய முருகனும், அவரது மனைவியும் மலர்கொடி தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்கொடியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.