பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கணவன்-மனைவி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் கணவன் ஒரு புறம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், உறவினர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அந்த பெண் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.