உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை பகுதியில் இன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுத வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் அமுதவள்ளிக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த அமுதவள்ளி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.