கர்ப்பப்பையில் ஆப்ரேஷன் செய்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சொக்கனூர் கவுசிக் நகர் பகுதியில் சேகர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவசங்கரி கடந்த 5 வருடத்திற்கு முன் கர்ப்பப்பையில் ஆப்பரேஷன் செய்துள்ளதால் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்றுவலி குணமாகவில்லை.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிவசங்கரி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆழ்வார்திருநகரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.