Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்னால அவங்களை சேர்த்து வைக்க முடியல….. பெண் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்….!!

தனது மகளையும், மருமகனையும் ஒன்று சேர்த்து வைக்க முடியாததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞானசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிதா திடீரென காணாமல் போனதால் ஞானசிகாமணி அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் கவிதா வீடூர் அணையில் பிணமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் விக்கிரவாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கவிதா அணையில் குதித்து தற்கொலை செய்துள்ளதும், தற்கொலை செய்வதற்கு முன்பாக அணையின் கரையோரம் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அந்த கடிதத்தில் கவிதா தனது மகள் திருமணம் செய்து கொடுத்து இடத்தில் வாழாமல் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டதாகவும், தனது மகளையும் மருமகனையும் ஒன்று சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |