திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகமாக இருந்தால் மன உளைச்சலில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகமானதால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து ஜெய லட்சுமியை தேடி பார்த்த உறவினர்கள் அவர் கிணற்றில் சடலமாக கிடப்பதை கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஜெயலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.