Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவன் என்ன விட்டு போயிட்டான்…. ஏக்கத்தில் எடுத்த விபரீத முடிவு…. தாய்க்கு நடந்த துயரம்…!!

மகன் இறந்த துக்கத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூவிருந்தாளி பகுதியில் மகாராஜா பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளின் மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜெயலட்சுமி எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இதனால் அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரையை ஜெயலட்சுமி சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ஜெயலட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தேவர்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |