Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவளும் என்னை விட்டு போயிட்டா” தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனகமுட்லு பகுதியில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேட்டு இறந்து விட்டதால் முனியம்மாள் தனது மகளான சத்யா உடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்யா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு  பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த முனியம்மாள் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முனியம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |