கடன் பிரச்சனை அதிகமாக இருந்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்மணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இந்நிலையில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த வெண்மணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெண்மணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.