Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏமாற்றி சென்ற மர்ம நபர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இவருக்கு சுகந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கின்றான். கடந்த மாதம் சுகந்தி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து பரிகார பூஜை செய்ய வேண்டும் என ஏமாற்றி சுகந்தி அணிந்திருந்த தாலி சங்கிலியை திருடி விட்டு மர்ம நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுகந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகந்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |