கடிதம் எழுதி வைத்து விட்டு இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு நல்லகண்ணு, ரோஹித் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நித்யா தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து நதியா எலி பேஸ்ட்டை டீயில் கலந்து தனது இரண்டு மகன்களுக்கும் கொடுத்துள்ளார். அதன் பின் நித்யாவும் அதனை குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் பரிதாபமாக பேர் இறந்து விட்டனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் நித்யா எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த கடிதத்தில் தனது கல்யாண வாழ்க்கை மோசமாக இருப்பதாகவும், கடவுள் கொடுத்த தனது பிள்ளைகளுக்கு நல்ல அப்பா அமையவில்லை எனவும் எழுதியுள்ளார். அதன் பின் எங்களது சாவுக்கு தனது கணவரும், அவரது அக்காவும் தான் காரணம் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். மேலும் எந்த காரணத்திற்காக சொத்தை வைத்து எங்களை சித்திரவதை செய்தார்களோ அந்த சொத்தை ஆசிரமத்திற்கு எழுதி வைக்க வேண்டும் என நித்யா அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசன் மற்றும் அவருடைய அக்கா செல்லமணி அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.