Categories
சினிமா தமிழ் சினிமா

வீரமங்கை வேலுநாச்சியாராக…. லேடி சூப்பர் ஸ்டார்…. வெளியான தகவல்…!!

தமிழ் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்று கதையில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் வீரமங்கை வேலு நாச்சியாரின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நரசிம்மரெட்டி என்ற வரலாற்று கதையில் நடித்தார். இந்நிலையில் தற்போது வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் சுசி கணேசன் உருவாக்குகிறார். தமிழ் சினிமாவில் பொதுவாக வரலாற்றுக் கதைகளில் நடிகை அனுஷ்கா நடித்து வரும் நிலையில் இந்த முறை நயன்தாரா நடிக்க இருப்பது அவருடைய சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவின் வேலுநாச்சியார் கதாபாத்திர வருகையை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |