புதரில் எறிந்த நிலையில் கிடந்த பெண்ணின் இறப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கியூபெக் நாட்டில் உள்ள ஷேர் ப்ரோக் நகரில் புதர் ஒன்று தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதனை கண்ட மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் மக்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் ஜவுளிக்கடை சிலிக்கான் பொம்மை ஒன்றிற்கு தீவைத்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் அங்கிருந்து பொம்மையை அகற்றி போலீஸ் நிலைய வளாகத்தில் இருக்கும் கண்டேய்னர் ஒன்றில் போட்டு வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ஒருவர் தனது மனைவியை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன பெண்ணின் மொபைலை ட்ராக் செய்துள்ளனர். அப்பொழுது புதர் தீப்பற்றி எறிந்த இடத்துக்கு அருகில் உள்ள காரில் மொபைல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசாருக்கு அந்த இடத்தில் எரிந்து கிடந்தது பெண்ணாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதன்பின் போலீஸ் நிலையத்தில் உள்ள கண்டேய்னருக்குள் போட்டு வைத்த எறிந்த பொம்மையை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது புதரில் எரிந்தது பொம்மை அல்ல காணாமல் போன அந்த பெண்ணின் உடல்தான் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசாரும் தீயணைப்பு துறையினரும் மக்கள் கொடுத்த தகவலின் பேரில்தான் இந்த தவறு நடந்ததாக கூறி மன்னிப்பு கேட்டு விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.