Categories
உலக செய்திகள்

குழந்தைகளின் உடலுடன் பல மாதங்களாக பயணித்த பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் குழந்தைகள் இருவரின் உடலுடன் வாகனத்தில் பல மாதங்களாக பயணித்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் மேரிலாண்ட் என்ற மாகாணத்தில் வசிக்கும் 33 வயதுடைய நிக்கல் ஜான்சன் என்ற பெண் கடந்த புதன்கிழமை அன்று வாகனத்தில் வேகமாக சென்றிருக்கிறார். எனவே காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி, சோதனை செய்த போது அதில் 7 வயதுடைய சிறுமி, 5 வயதுள்ள சிறுவனின் உடல்கள் கிடந்துள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும், நிக்கோல் ஜான்சனின் சகோதரியின் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. அக்குழந்தைகளை அவரின் சகோதரி கடந்த 2019 ஆம் வருடத்தில் இவரிடம் ஒப்படைத்திருக்கிறார். கடந்த வருடம் மே மாதம் இக்குழந்தைகள் உயிரிழந்திருந்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுமியை பலதடவை அடித்ததாக கூறினார். எனினும் அச்சிறுவன் உயிரிழந்தது தொடர்பில் அவர் எதுவும் கூறவில்லை. விசாரணை தொடர்ந்து வருகிறது.

Categories

Tech |