மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் புட்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெஸ்சி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெஸ்சி தனது சகோதரரான பீட்டர் என்பவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஜெஸ்சி உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ஜெஸ்சியை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர் அந்த விசாரணையில் ஜெஸ்சி அரசு பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வருவது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஜெஸ்சிக்கு சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதால் ஜெஸ்சி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். மேலும் மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு வந்து மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து ஜெஸ்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்றுள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் ஜெஸ்சியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.