Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்பது போல் நடித்து… இளம்பெண் செய்த செயல்… வசமாக சிக்கிய நான்கு பேர்…!!

லிப்ட் கேட்பது போல் நடித்து வாலிபரிடம் கத்தி முனையில் நான்கு பேர் திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருப்போரூர் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரம்-மதுரவாயல் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்து இளம்பெண் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது லிப்ட் கொடுப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை கணேஷ் ஒரு ஓரமாக நிறுத்திய போது அப்பகுதியில் மறைந்திருந்த அந்த பெண்ணின் கூட்டாளிகளான 3 வாலிபர்கள் விரைந்து வந்து கணேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது கணேசன் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து வழிப்பறி செய்ய முயன்ற நான்கு பேரையும் மடக்கிப்பிடித்து மதுரவாயல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் அவர்கள் அபிராமி நகர் பகுதியில் வசித்து வரும் உதயகுமார், முத்துக்குமார், பரசுபாலன் மற்றும் முத்துலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் வருபவர்களிடம் இருந்து லிப்ட் கேட்பது போல வழிப்பறியில் ஈடுபடுவது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |