நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘லேடி விஜய் சேதுபதியாக விரும்புகிறேன்’ என கூறியுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை நிவேதா பெத்துராஜ் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் பொதுவாக என் மனசு தங்கம் ,ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் ,விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல், விஜய் ஆண்டனியின் திமிருபிடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் தமிழில் ஜெகஜால கில்லாடி தெலுங்கில் ரெட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மேலும் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் .
அதில் தற்போது தெலுங்கு படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் ,முதலில் அது தனக்கு கஷ்டமாக இருந்தாலும் பின் பழகி விட்டதாகவும் கூறியுள்ளார் . இதையடுத்து ஒரே கதாபாத்திரத்தில் நடிக்காமல் அனைத்து விதமான கேரக்டர்களிலும் நடிக்க தனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார் . விஜய் சேதுபதி அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் அதேபோல் நான் லேடி விஜய் சேதுபதியாக வித்தியாசமான அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். மேலும் ஒரு நடிகரால் அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்கும் போது ஒரு நடிகையால் ஏன் நடிக்க முடியாது ? கூறியுள்ளார். தற்போது நிவேதா பெத்துராஜ் அளித்துள்ள இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது .