இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மூன்றாவது நபரையும் திருமணம் செய்து ஏமாற்ற முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ரவளி என்ற பெண் 2015-ம் வருடம் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து மூன்று மாதங்களில் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி 3 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக சீனிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஐந்து மாதங்களில் மீண்டும் வரதட்சணைக் கொடுமையை எனக் கூறி மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். இறுதியாக சுரேஷ் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக திருமணம் செய்தார்.
இந்நிலையில் மீண்டும் அவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கூறி தண்ணீர் டேங்க் ஒன்றின் மீது ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து அவரை சமாதானம் செய்து கீழே இறங்கச் செய்தனர். அதன் பிறகு சுரேஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க ரவளியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் இதற்கு முன்னதாக இருவரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.