பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு கொடுத்துவிட அருமையான மதிய உணவு வெண்டைக்காய் சாதம்
தேவையான பொருட்கள்
சாதம் 4 கப்
உள்ளி 15
வெண்டைக்காய் அரை கிலோ
கடுகு 1/4 ஸ்பூன்
உளுந்து 1/4 ஸ்பூன்
கடலைப்பருப்பு 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 4
தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன்
எண்ணெய் 4 மேசைக்கரண்டி
பூண்டு 10 பல்
உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை
- முதலில் வெண்டைக்காயை பொடியாக வெட்டி கொள்ளவும். அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உப்பு சேர்த்து பிசுபிசுப்பு தன்மை நீங்க வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு போட்டு உள்ளியை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய் அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- இறுதியாக சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கிவிடவும்.
- சுவையான வெண்டைக்காய் சாதம் தயார்.