பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணிடமிருந்து 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் சேலம் பைபாஸ் ரோடு பகுதியில் பாலகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பாத்தி திருக்காம்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, திடீரென 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்து அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து கரூர் டவுன் காவல் நிலையத்தில் பாப்பாத்தி புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிய அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பகல் நேரத்தில் பொதுமக்கள் மத்தியில் ஒரு பெண்ணின் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.