பிரபல நடிகை லைலா வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் பரவி வரும்கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பங்காக கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியாகி வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றன.
அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான லைலா வெளியிட்டுள்ள விழிப்புணர்வு மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பிதாமகன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியை வைத்து மாஸ்க் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.