கீழ்வேளூர் பகுதி தேவநதி ஆற்றை முறையாக பராமரித்து தூர்வார வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் கீழ்வேளூர் பகுதியில், கடுவையாறு, ஓடம்போக்கியாறு, வெட்டாறு, பாண்டவையாறு ,தேவநதி ஆறு ஆகிய ஆறுகளின் மூலம் ஆயிரக்கணக்கான எக்டேர் நிலங்கள் நீர் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த ஆறுகள் மூலம் காவிரி நீர் திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் மூலம், அகரகடம்பனூர், கீழ்வேளூர்,ஆழியூர், சிக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீர் செல்கிறது. இந்த நிலையில் கீழ்வேளூர் பகுதியில் உள்ள தேவநதி ஆறு, முறையாக பராமரிக்காமல் தூர்வாரப்படாமல் உள்ளது.
அப்பகுதி மக்கள் குளிக்க, கால்நடைகளை குளிப்பாட்ட போன்ற பல்வேறு தேவைகளுக்கு இந்த ஆற்றின் தண்ணீரையே பயன் படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஆற்றின் உள்ளே காட்டாமணக்கு உள்ளிட்ட தேவையற்ற செடிகள் வளரந்துள்ளதால் தண்ணீர் வரும் காலங்களில் விவசாயத்திற்கு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் முறையாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இதில் சம்மந்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் ஆற்றினை முறையாக பராமரித்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.