அரும்பாவூர் ஏரி கடந்த 4 மாதங்களில் மீண்டும் நிரம்பியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் இருக்கும் அரும்பாவூர் பச்சைமலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் கல்லாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அரும்பாவூர் ஏரிக்கு வந்தடைந்துள்ளது. இந்த ஏரியும் தற்போது நிரம்பியதால் அங்கிருந்து நீர் நிரம்பி வழிகிறது.
இந்த நீரானது அரும்பாவூர் சித்தேரி பகுதிக்கு செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு முழுவதும் பாசனம் மற்றும் குடிநீர் பஞ்சம் இருக்காது என தெரிவித்துள்ளனர். இந்த ஏரி கடந்த நவம்பர் மாதம் நிரம்பியுள்ளது. தற்போது நான்கு மாதங்களான நிலையில் மீண்டும் இது நிரம்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.