Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஏரி… வீசப்பட்ட இறந்த ஆடுகள்.. துர்நாற்றம்.. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஏரியில் இறந்த ஆடு கிடப்பதால் துர்நாற்றம் வீசுகின்றது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை அடுந்திருக்கும் பாதிரி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் மர்ம நபர்கள் இறந்த ஆடுகளை வீசி செல்கின்றார்கள். இதனால் நீர் மாசுபடுவதோடு துர்நாற்றமும் வீசுகின்றது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில் ஏரியில் சுமார் 150 முதல் 200 ஏக்கர் வரை தண்ணீர் பாசனம் கொண்டதாக இருக்கின்றது.

இந்த நிலையில் பல வருடங்களாக இறைச்சி கழிவுகள், மாட்டு சாணம் ஆகியவை கொட்டப்படுவதால் நீர் மாசுபடுகின்றது. இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் இறந்து போன செம்மறி ஆடுகளை மர்ம நபர்கள் ஏரியில் வீசிச் சென்றிருக்கின்றார்கள். இனிமேலாவது பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஏரியின் தண்ணீரை மாசப்படாத அளவிற்கு பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள்.

Categories

Tech |