மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, 1964 – 1965 சந்திக்கின்ற அந்த நேரத்தில்.. 19 65 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று இரவு, இதன் பிறகு ஹிந்தி போராட்டம் வலுக்க ஆரம்பித்தது. 1965 பிறந்தது. ஜனவரி 26இல் உங்கள் வீடுகளிலே கருப்பு கொடி ஏற்றுங்கள். நமது துக்கத்தை வெளிக்காட்டுவதற்காக கருப்புக்கொடி ஏற்றுங்கள் என்று அண்ணா அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள், லட்சக்கணக்கான மாண – கண்மணிகள் பொங்கி எழுந்தார்கள்.
நான் மாநில கல்லூரி மாணவன். நானும் நேப்பியர் பூங்காவிற்கு சென்றேன். நேப்பியர் பூங்காவில் இருந்து தான் இந்த மாணவர் பட்டாலம் லட்சக்கணக்கில் புறப்பட்டது. குண்டான் தடிகளுக்கு ஆளானோம், கபாலங்கள் பிளக்கப்பட்டது. மண்டை ஓடு பிளக்கப்பட்டன. காவல்துறை கடுமையான அடக்கு முறையை கையாண்டது. அந்த நேரத்தில் 25வது தேதி நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது மதுரை மாசி வீதியிலே 2 மாணவர்கள் வெட்டப்பட்டார்கள்.
காளிமுத்து, காமராஜர் அவர்கள் அரசியல் சட்டத்திற்கு தீ வைத்தார்களே.. அந்த காலகட்டத்தில்… அதற்குப் பிறகு மறுநாள் ஜனவரி 27 எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று முழங்கியவாறு அண்ணாமலை பல்கலைக்கழகத்து மாணவர்கள் திரண்டு வந்தார்கள், சீறி பாய்ந்து வந்தது குண்டு. அது ராஜேந்திரனுடைய தொண்டடை குழியில் பாய்ந்தது என தெரிவித்தார்.