Categories
தேசிய செய்திகள்

லட்சம், லட்சமாக கூடும்….! ”அரசால் ஒன்னும் பண்ண முடியாது” மம்தா ஆவேசம் …!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை லட்சம் லட்சமாக உயர்ந்தால் தனிமை படுத்த முடியாது என்று மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல் படுத்தி உள்ளது. இதனிடையே மத்திய அரசும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாநில அரசுகள் சுகாதார பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இதனிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகள் குறித்து விவாதித்தார். மேலும் ஊரடங்கை நீடிக்கலாமா போன்ற பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

Centre raises red flag over Covid-19 situation in 7 Bengal ...

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப் பட்டுள்ளவர்கள் தாங்களாகவே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை லட்சம் லட்சமாக உயர்ந்தால் தனிமை படுத்த முடியாது. அரசுக்கு என்று ஒரு வரம்பு உள்ளது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. அதேபோல 110 பேர் குணமடைந்துள்ள நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |