லட்சுமி மேனன் ‘ஏஜிபி’ படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகை லட்சுமிமேனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் நடிப்பில் வெளியான கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான புலி குத்தி பாண்டி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ”ஏஜிபி” என்னும் படத்தில் நடித்துள்ளார் நடிகை லட்சுமிமேனன். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகை லட்சுமிமேனன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியம் இயக்க இருக்கிறார். மேலும், முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருவது போல் அவர்கள் பாணியில் தற்போது லட்சுமி லட்சுமி மேனனும் பின்பற்றுகிறார்.