தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழும் யோகி பாபு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் மலை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.
லெமன் லீப் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் மலை திரைப்படத்திற்கு டி இமான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் யோகி பாபு மற்றும் லட்சுமி மேனன் நடிக்கும் மலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
#Malai First Look! Starring YogiBabu and LakshmiMenon in the lead! Directed by Debutant Murugesh! And Produce by Lemon Leaf Creation https://t.co/GGl9rQfqgy! A #DImmanMusical Praise God! pic.twitter.com/WxsPsnEvFv
— D.IMMAN (@immancomposer) December 8, 2022