உடல்நிலை மோசமானதால் லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மாட்டு தீவன ஊழல் வழக்கில் கைதான லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவில் உள்ள லாலு பிரசாத் யாதவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர் காமேஸ்வர் பிரசாத் கூறுகையில், “கடந்த 2 நாட்களாக அவர் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டது. இதன் காரணமாகவே லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைத்தோம்” என்றார்.