Categories
பல்சுவை

LAMBORGHINI CAR…. 17 வருடத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி…. சுவாரஸ்சிய கதை இதோ….!!

Kenyupol என்ற நபர் லம்போர்கினி காரை வாங்க வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார். இந்த காரை வாங்குவதற்கு போதிய பணம் அவரிடம் இல்லாததால் தானே ஒரு காரை உருவாக்கி விடலாம் என நினைத்து தனது வீட்டின் basementல் இதற்கான வேலையை தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 17 வருடமாக அவர் இந்த காரை செய்துள்ளார். ஆரம்பத்தில் மரப்பட்டையை வைத்தும் போகப்போக வெல்டிங் மூலம் ஒவ்வொரு பாகமாக தயாரித்து இறுதியாக லம்போகினி காரை உருவாக்கியுள்ளார்.

இதற்காக அவர் செலவு செய்த பணம் சுமார் 65 ஆயிரம் டாலர் ஆகும். மேலும் இந்த காரில் பயணம் செய்யும் போது ஒரு மணி நேரத்திற்கு 140 மைல் கடந்து செல்ல முடியும். ஆனால் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால், அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சிறிய பிரச்சினை வந்ததினால் தானே உருவாக்கிய காரை அவர் வெறும் 89 டாலருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த காரை ஓட்டுவதை விட செய்யும்போதுதான் பெருமையாக இருந்தது என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |