Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பட்டா பெயர் மாற்றம்…. சிக்கிய துணை தாசில்தார்…. லஞ்சஒழிப்பு துறையினரின் நடவடிக்கை….!!

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கேத்தனூரில் ராஜாமணி என்ற நெசவு தொழிலாளி வசித்து வருகின்றார். இவர் தன் தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவது குறித்து உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படாததால் தாலுகா அலுவலகம் சென்று மண்டல துணை தாசில்தார் மேகநாதனை சந்தித்து கூறியுள்ளார். அதற்கு அவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க மறுத்த ராஜாமணி லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தெட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் வினோதினி ஆகியோர் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை அதிகாரி மேகநாதனிடம் கொடுக்கும்படி ராஜாமணியிடம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து ராஜாமணி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த தாசில்தார் மேகநாதனிடம் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விரைந்து சென்று லஞ்ச பணத்துடன் துணை தாசில்தார் மோகநாதனை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதன்பின் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மோகநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |