சென்னை வடபழனி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கண்ணன் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களிடம் பணம் வசூலிப்பதற்காக தினம்தோறும் ரோந்து செல்வது போன்று திருமண மண்டபத்தில் பணத்தைப் பெற்றுவருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஆய்வாளர் கண்ணன் பணம் வாங்கும் காட்சியை பணம் கொடுத்த நபரே செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories