Categories
தேசிய செய்திகள்

“பத்ரிநாத் கோவில்”… நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு…!!

பத்ரிநாத் கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. ஆனால் மே மாதம் திறக்கப்பட்ட பத்ரிநாத் கோவிலில் சிறப்பாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலம் சோமாலி மாவட்டத்தின் அருகில் கவுச்சர் பகுதியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு காவல் துறையினர் முகாம்கள் அமைத்து அங்கு தங்கியுள்ளனர்.

நேற்றிரவு திடீரென கவுச்சர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் பாதிப்படைந்தன. இதனால் பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையானது முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலையை சீர்செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திடீர் நிலச்சரிவால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Categories

Tech |