Categories
தேசிய செய்திகள்

நிலம் ஆக்ரமிப்பு… சட்டவிரோத கட்டிடம்…. பிரபல சாமியார் கைது… அதிரடி காட்டிய பாஜக அரசு …!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரபல சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவராஜ் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசில் மந்திரியாக பொறுப்பு வகித்தவர் சாமியார் ராம்தேவ் தியாகி. கடைசியாக நடைபெற்ற 2018 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அவர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.  பின்னர் நதிகளுக்கான அரசாங்க அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இந்த ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டு பாரதிய ஜனதா அரசு மீண்டும் ஆட்சியை பிடித்தது.

காங்கிரஸ் கட்சி தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இருந்த பல எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து, அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டனர். அவர்களை ராம்தேவ் தியாகி துரோகிகள் என்று விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஜனநாயகத்தை காப்போம் என்ற பெயரில் முன்னெடுத்தார்.

தேர்தல் முடிவுகள் இன்னும் வெளி வராமல் இருக்கும் இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச அரசாங்கம் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஜம்பூர்தி ஹப்சி கிராமத்தில் 40 ஏக்கரில் அமைந்துள்ள அவரின் ஆசிரமத்தில் 2 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட தாக்கப்பட்டதாகவும்,  சட்டவிரோதமான கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது என்றும் அரசு அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஆசிரம நிர்வாகிகளுக்கு ரூ. 2000 அவதாரம் விதித்து சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வருவாய் துறையினர் உத்தரவிட்டனர். ஆனாலும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை ஆசிரமம் அகற்றதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மத்தியபிரதேச அரசு ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டது. நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் எந்த பிரச்சனைகள் வராமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை சாமியார் ராம்தேவ்  தியாகி, அவரது உதவியாளர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |