Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முற்றிய இடத்தகராறு… தம்பதி மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை..!!!

இட தகராறு காரணமாக தம்பதியை கற்களால் தாக்கிய வாலிபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் ஆண்டி மடத்தில் உள்ள ஓலையூர் வடக்கு காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய குடும்பத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் புரட்சிமணி என்பவருடைய குடும்பத்திற்கும் இடையே இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பாலமுருகனின் மனைவி சுகன்யா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த புரட்சிமணி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதனை தட்டிக் கேட்க வந்த பாலமுருகனை  தாக்கியுள்ளார்.

மேலும் கீழே கிடந்த கற்களை எடுத்து பாலமுருகனை தாக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக சுகன்யாவின் தலை மற்றும் முகத்தில் பட்டதில், அவர் காயமடைந்தார். இதன் பின்னர் புரட்சிமணி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து சுகன்யா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பாலமுருகன் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |