ஈரோடு அருகே ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட 18 வீடுகள் அகற்றப்பட்டன.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை அடுத்த ஆவுடையார் பாறை பகுதிக்கு முன்பாக உள்ள சாலையில் தன்னாசியப்பன் கோவில் அருகில் உள்ள நிலமானது நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இதை சிலர் ஆக்கிரமித்து அதில் வீடுகளை கட்டி குடியேறினர்.
பின் இதுகுறித்து பொது நல வழக்கு தொடரப்பட்டு ஒரு மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீடுகளை அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதன்படி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டும் தண்டோரா அடிக்கப்படும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து 20 நாட்கள் அவர்கள் கால அவகாசம் கேட்டனர். இந்த கால அவகாசம் நேற்று முடிந்த நிலையில், அப்பகுதியில் 18 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதில் வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், மின் உதவி ஆய்வாளர், மாவட்ட ஆட்சியர் உட்பட பல அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். மேலும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க காவல் துறையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.