ஆள்மாறாட்டம் மூலம் 2 கோடிக்கு நிலத்தை விற்பனை காவலாளி மற்றும் வக்கீலை காவல்துறையினர் கைது செய்தனர்.
குஜராத்தை சொந்த மாநிலமாக கொண்ட சோனலிசா என்பவருக்கு 10 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அதற்கு காவலுக்கு விஜயகுமார் என்பவரை நியமித்துள்ளார். இந்நிலையில் செய்யாறு அருகிலுள்ள வட்டாரம் பகுதியில் உள்ள பெருமாள் எனும் வக்கீல் திருகழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோனலிசா என்று போலியான நபரை அடையாளம் காட்டி 10 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சோனலிசா அதிர்ச்சியடைந்து காஞ்சிபுரம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நில அபகரிப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சோனலிசாவின் நிலத்தை ஆள்மாறாட்டம் மூலம் பலருக்கும் ரூபாய் 2 கோடி வரை விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து வக்கீலும் அவருக்கு உடந்தையாக இருந்த காவலாளியையும் போலீசார் கைது செய்தனர்.