17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள Streatham என்னும் பகுதியில் Denardo Samuels-Brooks என்ற 17 வயதுள்ள சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் 15 முதல் 18 வயதுடைய மூன்று பெண்கள் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனைதொடர்ந்து எட்டாவதாக 19 வயதுள்ள இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்தப் இளம்பெண் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டி நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனால் நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்று செப்டம்பர் மாத தொடக்கத்தில் திரும்ப வர வேண்டும் என உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில் “சிறுவன் கொலை தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தொலைபேசி மூலமாகவோ சமூக ஊடகங்களின் மூலமாகவோ தங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.