கிழக்கு லண்டனில் முடிதிருத்தும் கடையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நியூ ஹாம் பகுதி அப்டன் லேன்னில் உள்ள ஒரு முடி திருத்தும் கடையில் திடீரென்று நுழைந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் இதில் 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டும் மற்றும் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் மெட்ரோபொலிட்டன் போலீசாரால் மீட்கப்பட்டு கிழக்கு லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களின் நிலை குறித்த எந்த விவரமும் வெளியிடவில்லை.
இதனையடுத்து எந்த தீவிரவாத அமைப்பும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காததால் இது பயங்கரவாத நிகழ்வாக கருதப்படவில்லை. மேலும் சம்பவம் நடந்த இடம் அப்படியே உள்ளதாக மெட் காவல்துறை அறிவித்துள்ளது.இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிப்பதற்காக நியூஹாம் நகரில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை போலீஸ் அதிகாரிகளுக்கு அதிக நிறுத்தம் மற்றும் தேடல் அதிகாரங்களை வழங்கும் section 60 என்னும் உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாரை அணுகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.