கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் காணாமல் போயுள்ளனர்.
வெனிசுலா நாட்டில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டிலுள்ள லாஸ் தேஜேரியாஸ் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து கால்வாய்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் அரகுவா மாகாணத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டனர். இதில் 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேரை காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து வெனிசுலா நாட்டின் அதிபரான நிக்கோலஸ் மதுரோ அவசர கால நிலையை பிறப்பித்து மீட்பு பணிகளை சம்பவ இடத்திற்கு விரையும்படி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்கும் வகையில் அந்நாட்டில் மூன்று நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என அதிபர் தெரிவித்துள்ளார்.