100 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் சிறுவனின் முட்டை வண்டியை தள்ளி விட்டுவியாபாரத்தை கெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் சாலையோரம் தள்ளுவண்டி கடை ஒன்று வைத்து 14 வயது சிறுவன் முட்டை விற்பனை செய்து கொண்டிருக்கிறான். அச்சமயத்தில் அங்கு சென்ற மாநகராட்சி அலுவலர்கள் சிறுவனிடம் 100 ரூபாய் லஞ்சம் கொடுக்குமாறு மிரட்டி இருக்கின்றனர். அப்போது சிறுவன், இன்னும் வியாபாரம் ஆகாத காரணத்தால் 100 ரூபாய் பணம் என்னிடம் இல்லை என கூறியுள்ளான். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் பணம் தராவிட்டால் இந்த இடத்தில் கடை நடத்த கூடாது என எச்சரித்துள்ளனர்.
அதற்கு பதில் கூறிய சிறுவன், கொரோனா ஊரடங்கு காரணமாக சரியாக வியாபாரம் ஆகவில்லை, இப்படிப்பட்ட சூழ்நிலையில் வியாபாரத்தில் தாங்கள் பங்கு கேட்பதில் என்ன நியாயம்? என கூறி இருக்கின்றான். அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த மாநகராட்சி அலுவலர்கள், சிறுவனின் முட்டைகள் நிரம்பியிருந்த தள்ளு வண்டியை கீழே தள்ளிவிட்டனர். அத்தகைய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.
https://www.youtube.com/watch?v=3S_dzU3OKTk