Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா – நீதிமன்றம்..!!

மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் உயிர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வுமுன் நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா என்றும் மணல் கடத்தல் சம்பந்தமாக எத்தனை வி.ஏ.ஓ  மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர். மணல் கடத்தல் வழக்கில் எத்தனை வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசின் உத்தரவுகளை எத்தனை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றுகிறார்கள் என்றும் வினவியுள்ளார்.

டாஸ்மாக் விற்பனை போல மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனை அடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 21-ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Categories

Tech |