Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருப்பதி போயிட்டு வந்தவருக்கு….! காத்திருந்த அதிர்ச்சி…. நொந்து போன உரிமையாளர்…. போலீஸ் விசாரணை ..!!

கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இருந்த பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பராங்குசம் தெருவில் முரளி என்பவர் வசித்துவருகிறார். இவர் மன்னார்குடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே ஒரு செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளி திருப்பதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் முரளி ஊரில் இருந்து திரும்பி வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து கடைக்குள் சென்றுபார்த்த பொழுது, அங்கு உள்ள மேஜை அருகில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 65 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு லேப்டாப்கள், ரூபாய் 24 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக முரளி மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து  மன்னார்குடி போலீஸ் வழக்கு பதிந்து செல்போன் கடையில் மேற்கூரையை பிரித்து பணம், லேப்டாப் மற்றும் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |