லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 2 லேப்டாப்கள் மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள சோளிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஆண்களுக்கான விடுதி ஒன்று செயல்படுகிறது. அந்த விடுதியில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சசிகுமார் என்பவர் பணிபுரிகிறார். இவர் விடுதியில் காலை 9 மணி அளவில் தூங்கிவிட்டு மதியம் எழுந்து பார்த்தபோது, அறையில் வைத்திருந்த அவரது லேப்டாப்பை காணவில்லை. இச்சம்பவம் குறித்து சசிகுமார் உடனடியாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் சசிகுமாரின் அறைக்குள் இரண்டு பேர் நுழைந்து லேப்டாப்பை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லேப்டாப் திருடிய குற்றத்திற்காக தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வரும் பாலாஜி என்பவரையும், காசிமேட்டில் வசித்து வரும் சூர்யா என்பவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 6 செல்போன்கள் மற்றும் 2 லேப்டாப்களை பறிமுதல் செய்தனர்.