Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மேலாளரை பழிவாங்கும் நோக்கத்தில்…. ஊழியர் செய்த காரியம்…. விசாரணை தெரிந்த உண்மை….!!!

மேலாளரின் லேப்டாப்பை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சைவ உணவகம் அமைந்துள்ளது. இங்கு ராஜ்குமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது லேப்டாப்பை யாரோ திருடிவிட்டதாக ராஜ்குமார் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியரான பிபுல்தாஸ் என்பவர்தான் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் பிபுல்தாசை கைது செய்து அவரிடம் இருந்த லேப்டாப்பை மீட்டனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிபுல்தாஸ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார். ராஜ்குமார் அடிக்கடி திட்டியதால் பழிவாங்கும் நோக்கத்தில் லேப்டாப்பை திருடியதாக பிபுல்தாஸ் கூறியுள்ளார்.

Categories

Tech |